என்னோட கதையும் சோகம்தான்!




வெள்ளி செவ்வாய் தவிர
மத்தநாளில் விரதம்
அதுவும்
வெள்ளை வெறுஞ்சோறு
வெஞ்சனமெல்லாம் இல்ல

அள்ளிவச்ச சோறும்
ஆடுகோழி தின்னுபோக
எஞ்சிய மிச்சம்தான்
என் வயிறும் நிறையுதில்ல

நல்லநாள் பெரியநாளில்
நாலுகுடம் தண்ணி,
வெல்லமிட்ட சோறு
வேகவச்ச கடலை...

பிள்ளைகள் பந்தடிக்கப்
பேசாத நடுவர்,
பெண்களின் சண்டையிலோ
கண்ணவிஞ்ச கடவுள்...

இன்னுமென்ன சொல்ல,
என்னுடைய பெருமையின்னு?
பிள்ளையாரா யிருப்பதற்குப்
பெருச்சாளியே தேவலாம்தான்...

No comments:

Post a Comment