சோம்பேறிகள்

தூக்கம்வர படித்த
சிந்தனையை
கனவுடன் கலைத்துவிட்டு
காலையெழுந்தேன்.

முக்கியும் முனகியும்
நடந்தும் ஓடியும்
பலனில்லை...
குனியாமலே
தெரிந்த தொந்தி

இரவினில் தின்ற
தோசைக்கு
தொட்டுக்கொண்ட
காரச்சட்னி...
காலையிலும்
கடுகடுத்த வயிறு

பாழாய்ப்போன
பல் தினமும்
கேட்கும் பற்பசை

உழைப்பறியா
உடம்புக்கு
அழுக்குகளை
களைந்தெடுக்க
ஐஸ்வர்யாராயின்
படம் சுற்றப்பட்ட
சவக்காரம்

எல்லாமுடித்து
பசியாற பார்த்திருந்த
நேரத்தில் பழைய
சோறை போட்ட
புதிய மனைவி

தயிரூற்றி உண்ட
களைப்பில்
அலுவலகத்தில் சிறிது
உறக்கம்.

இடையிலேதேனும்
சிந்தனை
எழுதவேண்டும் எனும்
நோக்கில்
வரைந்தேன் என்
வலையில்...

"உலகத்தில் எல்லோருமே
சோம்பேறிகள்..."

No comments:

Post a Comment