அம்மா கவிதைகள்

பனிக்காலம்

உள்சட்டை,
கம்பளிச் சட்டை,
காலுறை,
போர்த்திக் கொள்ள
போர்வை என
அனைத்துக்கும்
மேலாய்
உன்
அரவணைப்பு.
சமாளித்துக் கொள்வேன்
இந்த
பனிக் காலத்தை
எளிமையாய்.
முப்படை நீ
ஆபத்துக்களை
அறியத்தெரியாத
என்னை
முப்படையாய்
இருந்து
காப்பவள்
நீ.
உன்னை
காக்கும்
நாட்களை
எண்ணி
காத்துக்
கொண்டிருக்கிறேன்
நான்.

காத்திருக்கிறேன்


என்
சிறுவயது
நினைவுகளை
புகைப்படமாக்கினாய்.
என்
முதல் அழுகையை
பதிவு
செய்தாய்.
நான்
வளர்ந்ததும்
பார்க்க.
உன்னை காக்கும்
நேரத்தை
எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்
நான்.

பயம்
பயமாய்
இருக்கிறது.
மனிதர்களை
மதிக்கத்
தெரியாத பலர்
வாழ்கின்ற
இந்த
உலகத்தில்
ஏன்
என்னை
இணைத்து விட்டாய்.


உன்
உடலை
கூறுபோட்டு
வெளிவந்தேன் நான் .
பிரசவ
மயக்கம் தெளிந்து
என்
முகத்தை பார்த்து
பூரிப்படைந்தாய்
நீ வலிகளை மறந்து.
வலிகளை
உண்டாக்கிய என்னால் மட்டும்
ஆறுதல்
சொல்ல முடியவில்லை உனக்கு.
என்னால்
முடிந்தது ஒன்றுதான்
என்
முதல் அழுகை
உனக்கே சமர்ப்பணம்.

No comments:

Post a Comment