நாம் மனிதாபிமானிகள்

காதலைப்பிழிந்து பிழிந்து
கவிதை வடிப்போம்..!
மென்மனசுக்காரர் நாமெனப்
பீற்றித் திரிவோம்..!
எம்மைக் கடிக்கும்
எறும்பையும்
தடவிக்கொடுக்கும்
வள்ளலார் ஆவோம்!
மிருகவதைக்கு எதிரானவர்
என்று கோஷமிடுவோம்..!
ஏட்டில் எல்லாமே
எழுதி வைப்போம்!
சொல்லில்
வாள் வீச்சு நடத்துவதே
நம் செயலாக்கி மகிழ்வோம்!
துடித்து அழும் என் இனம்..
உயிர் வதையில் வலி கொள்ளும்..
என் உதரம்..
முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள
எம் உறவுகள்..
ம்ஹீம்..
அவர் விழிநீர்
துடைக்க கூட
விரல் கொடுக்கமாடோம்..
ஏனெனில்
நாம் மனிதாபிமானிகள்..!

No comments:

Post a Comment