நான் புரிந்து கொண்ட
முதல் கவிதை - அன்னை
புரிய முயன்ற
கவிதை - அப்பா
புரிய முயன்று தோற்றுப் போன
கவிதை - மனைவி
புரியாமலேயே போன
கவிதைகள் - மக்கள்
நான் மட்டும் என்ன ?
புரிந்தும் புரியாத புதிர்தானே !
====================================================================================
புரிந்த முதல்கவிதை பெற்றாள்; முயன்று
தெரிந்தவிடம் தந்தையே; தோற்றவிடம் இல்லாள்
புரியாமல் போன கவிதை புதல்வர்;
புரிந்தும் புரியாத நான்.
No comments:
Post a Comment