நகைச்சுவை துணுக்குகள்

எ‌ன் த‌ம்‌பி ச‌ரியான பு‌த்தக‌ப் புழுடி...
ஏ‌ன் எ‌ப்பவு‌ம் பு‌த்தகமு‌ம் கையுமா இரு‌ப்பானா
‌‌நீ வேற... அவன் புத்தகத்தை வெச்சுக்கிட்டு எ‌ன்ன நெளி நெளியறா‌ன் தெ‌ரியுமா?
--------------------------------------------------------------------------------
டே‌ய் படி‌க்காமலே நா‌ன் 10 மா‌ர்‌க் வா‌ங்குவே‌ன்டா
எ‌ப்படிடா? ‌நீ தா‌ன் பரீட்சையில் ஒண்ணுமே எழுத மா‌ட்டியே?
ஆமா‌ம்.
எழு‌தினா‌த்தானே பே‌ப்ப‌ர் கச‌ங்கு‌ம், பேப்பர் நீட்டா இருந்தா 10
ம‌தி‌ப்பெ‌ண் த‌ர்றதா ந‌ம்ம டீ‌ச்ச‌‌ர் சொ‌ல்‌லி‌யிரு‌க்கா‌ங்களே?
--------------------------------------------------------------------------------
எ‌ன் பைய‌ன் எ‌ப்படி இரு‌க்கா‌ன் சா‌ர் ப‌ள்‌ளி‌யில...
அவ‌ன் இரு‌க்குற இடமே‌த் தெ‌ரியாது‌ங்க சா‌ர்.
அவ்வளவு அமைதியாவா இருக்கான்?
நீங்க வேற... வகு‌ப்புல இரு‌க்காம எ‌ங்கயாவது போ‌ய் ஒ‌ளிஞ்சுக்கிறான். யாராலயுமே க‌ண்டுபுடி‌க்க முடியல‌ன்னு சொல்ல வந்தேன்.
--------------------------------------------------------------------------------
நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.
‌நீ‌திப‌தி: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!
--------------------------------------------------------------------------------
நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் பண‌ம் வை‌த்த‌ப் பொருளோடு சே‌ர்‌த்து எடுத்திட்டு போயிடறானே எ‌ன்ன ப‌ண்றது.
எ‌ப்பவுமே அவ‌ன் எடு‌க்காத அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கு‌ம் எடு‌த்து‌க்‌கி‌‌ட்டு‌ம் போக மா‌ட்டா‌ன்.
--------------------------------------------------------------------------------
உ‌ங்க ‌நீளமான‌க் கூ‌ந்தலு‌க்கு‌க் காரண‌ம்
காலை‌யி‌ல் எ‌ழு‌ந்தது‌ம் ஷா‌ம்பு போ‌ட்டு கழுவுவே‌ன். மாலை‌யி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் வை‌ப்பே‌ன்.
அ‌ப்போ இர‌வி‌‌ல்?
ரொ‌ம்ப‌த் தொ‌ல்லையா‌‌‌ய் இரு‌ந்தா‌ கழ‌‌ட்டி ஆ‌ணி‌யி‌ல் மா‌ட்டிடுவே‌ன்.
--------------------------------------------------------------------------------
ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?
மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார்.
--------------------------------------------------------------------------------
வர வர லஞ்ச விவகாரம் இவ்வளவு முத்திப் போகும்னு கனவுல கூட நினைக்கல!
ஏன்? என்ன ஆச்சு?
ஒரு வேலைய முடிக்க எவ்வளவு லஞ்சம் ஆகும்னு சொல்றதுக்கே 100 ரூபா லஞ்சம் கேக்கறாங்கன்னா பாத்துக்கயேன்.
--------------------------------------------------------------------------------
யார் யாரைத்தான் டிரான்ஸ்பர் செய்யறதுன்னு ஒரு வெவஸ்தை இல்லாம போயிடுச்சு!
ஏன்? என்னாச்சு?
நம்ம ஆபீஸ் வாசல்ல இருந்த பெட்டிக்கடைய வேற இடத்துக்கு மாத்திட்டாங்க.
--------------------------------------------------------------------------------
இ‌ந்த மாணவ‌ன்தா‌ன் எ‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ல் நட‌ந்த க‌ட்டுரை‌‌ப் போ‌ட்டி‌யி‌ல் முத‌ல் ப‌ரிசு‌ப் பெ‌ற்றவ‌ன்.
எதை‌ப் ப‌ற்‌றி க‌ட்டுரை எழு‌தினா‌ன்.
த‌ண்‌ணீ‌‌ரி‌ன் பய‌ன்க‌ள் எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் க‌ட்டுரை எழு‌தி‌யிரு‌க்கா‌ன்.
அ‌ப்படியா ந‌ல்லது.. உ‌ங்க‌ப்பா எ‌ன்ன ப‌ண்றாரு‌ப்பா?
பா‌ல் ‌வியாபார‌ம்.
--------------------------------------------------------------------------------
நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?
‌நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.
ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.
எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?
‌நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு
--------------------------------------------------------------------------------
எ‌ன்ன‌ங்க சா‌ர் இது.
ஏ‌ன் எ‌ன்ன ஆ‌ச்சு.
உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் பிராந்தி குடிக்கறானே
சீ! சீ! அவனுக்கு முன்னாடியே நான் குடிக்க ஆரம்பிச்சுட்டேன். அவ‌ன் இ‌ப்போ‌த்தா‌ன் ஆர‌ம்‌பி‌ச்‌சி‌யிரு‌க்கா‌ன்.
--------------------------------------------------------------------------------
என் பையன் 420 மார்க் எடுத்ததுனால என‌க்கு தெ‌ரி‌‌‌ஞ்சவ‌ங்க ‌கி‌ட்ட எ‌ல்லா‌ம் போ‌ய் ‌சீ‌ட் கே‌ட்க வே‌ண்டிய ‌நிலைமை ஆ‌யிடு‌ச்சு.
என்ன சார் 420 மார்க்குக்கு கேக்கற குரூப் கொடுப்பாங்களே! ஆமா‌ம்.. 10வ‌தி‌ல் எடு‌த்‌திரு‌ந்தா பரவா‌யி‌ல்லை. இவ‌ன் ‌தா‌ன் ‌பிள‌்‌ஸ்டூ வா‌ச்சே.
--------------------------------------------------------------------------------
உன் பையனுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்ப என்ன பண்றான்?
தொலைதூர‌க் க‌ல்‌வி வ‌ழியா பி.ஏ. படிக்கிறான்!
--------------------------------------------------------------------------------
ஆ‌சி‌ரிய‌ர் : வான் கோழி முட்டை போடு‌‌ற பறவை இன‌ம்
மாணவ‌ன் : அ‌ப்போது அது உ‌ங்க இன‌ம்னு சொ‌ல்லு‌ங்க..
ஆ‌சி‌ரிய‌ர் : ‌‌எ‌ப்படிடா?
மாணவ‌‌ன் : நீ‌ங்க‌ளு‌ம் மு‌ட்டைதானே போடு‌‌றீ‌ங்க.
--------------------------------------------------------------------------------
நா‌ன் எழு‌தின கதை எ‌ப்படி இரு‌க்கு?
ரொம்ப சுமாராத்தான் இருக்கு உப்பு சப்பே இல்ல!
கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது.
--------------------------------------------------------------------------------
திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?.
--------------------------------------------------------------------------------
அண்ணாச்சி கடையில போய் திருடணும்னா உனக்கு என்ன தைரியம்?
எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோன்னு அவங்கதான எசமான் விளம்பரம் செஞ்சாங்க!
--------------------------------------------------------------------------------
"அந்த பொண்ணு அவன் கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினானே.. இப்ப என்னாச்சு தெரியுமா...?"
"என்னாச்சு?"
"பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்..."
--------------------------------------------------------------------------------
என்ன உன்னோட லவர் கிட்ட அடி வாங்கிட்டேன்னு கேள்விபட்டேன்?
அத ஏன் கேக்கற! இந்த டிரஸ்ல நான் நல்லா இருக்கேனான்னு கேட்டா. இந்த டிரஸ் இல்லாமையும் நல்லா இருப்பன்னு சொன்னேன், தப்பா எடுத்துக்கிட்டா!
--------------------------------------------------------------------------------
நல்லா ஓவர் போடுவாரே அவர் இன்னிக்கு ஆடலியா?
ஓவரா போட்டுட்டுப் படுத்துட்டாராம்.

--------------------------------------------------------------------------------

என் காதலருக்கு குறும்பு ஜாஸ்தி.
எப்படி சொல்ற?
உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்'னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு
--------------------------------------------------------------------------------

என்ன உன் கணவர் தூக்கதுல 'ஹலோ.. ஹலோ..'ன்னு டெலிபோன்ல பேசறது மாதிரி பேசறாரு?.
நான்தான் சொன்னேனே, அவருக்கு தூக்கத்துல 'கால்' போட்ற பழக்கம் இருக்குன்னு.
--------------------------------------------------------------------------------
நண்பர் 1: எப்பவும் 'காப்பி' அடிச்சே பாச பண்ணுவானே, உன் பிரண்டு..இப்ப என்ன பண்றான்?.
நண்பர் 2: ஒரு பத்திர்க்கை ஆபிசில 'காப்பி' ரைட்டரா இருக்கான்.
--------------------------------------------------------------------------------
நண்பர் 1: டேய் நீ வெப்சைட் வெச்சிருக்கியா..?
நண்பர் 2: இல்லடா.. பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்
--------------------------------------------------------------------------------
அமலா : என்னது உன் கணவரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே!
விமலா : இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார்.
--------------------------------------------------------------------------------
நண்பர் 1 : சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
நண்பர் 2 : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்.
--------------------------------------------------------------------------------
என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?
பின்ன நீ செஞ்சு வச்ச பலகார‌த்தை எ‌ல்லா‌ம் சா‌ப்‌பிட‌ணு‌ம்னா வேற எ‌ன்ன ப‌‌ண்றது சொ‌ல்லு?
--------------------------------------------------------------------------------
நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.
--------------------------------------------------------------------------------
ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?
சோமு : ம் .. .. .. உங்க வீடா ?
--------------------------------------------------------------------------------

நண்பர் 1:உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

நண்பர் 2 : அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.
--------------------------------------------------------------------------------
மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
மாணவன் 2:யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.
--------------------------------------------------------------------------------
குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி :அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் ..
--------------------------------------------------------------------------------
மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்.
--------------------------------------------------------------------------------
ரானி : போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றார் ?
வேனி : ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்கிறார்.
--------------------------------------------------------------------------------
மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன் : வேற என்னதான் போட்ட?
மனைவி : பேசாம பட்டிணி போட்டேன்.
--------------------------------------------------------------------------------
பாக்கி : என் மனைவியோடு ஹேhட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .

ரமனன் : என்னாச்சு ?
பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா.
--------------------------------------------------------------------------------
பாக்கி : நேற்று ஏன் லீவு ?

ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்.
--------------------------------------------------------------------------------
பாக்கி : அதிக விலை கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது போலருக்கே.

வேலு : எத வச்சு சொல்ற?
பாக்கி : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார்.
--------------------------------------------------------------------------------
பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா நல்லா இருக்கும்.
--------------------------------------------------------------------------------
சர்வர் : முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.
முதலாளி : என்ன எழுதியிருக்கேன்?
சர்வர் : தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.
--------------------------------------------------------------------------------
பாக்கி : ஏன் சார் நீங்களோ வீணை வித்வான் பின்ன ஏன் குரல் சரியில்லைன்னு கச்சேரி வேணாண்டீங்க?
ரமனன் : நான் பாடிக்கிட்டே தான் வாசிப்பேன் அதனால தான்.
--------------------------------------------------------------------------------
வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
பாக்கி : நீ என்னாவே....?
வேலு : காலியாயிருவேன்.
--------------------------------------------------------------------------------
சிலுக்கு சீனி : "படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"
விச்சு : "கரும்பு".
--------------------------------------------------------------------------------
ரமனன் : புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப் போச்சு.
வேலு : ஏன்?
ரமனன் : நல்லா புரட்டி எடுத்துட்டாரு.
--------------------------------------------------------------------------------
டாக்டர் : அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.
நர்ஸ் : எப்படிச் சொல்றீங்க ?
டாக்டர் : நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.
--------------------------------------------------------------------------------
வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.

--------------------------------------------------------------------------------

ஏ‌ன்யா.. அ‌ந்த ‌தீ‌ப்‌பிடி‌ச்ச க‌ட்டி‌ட‌த்‌தி‌ல் இரு‌ந்து 6 பேரை‌க் கா‌ப்பா‌த்‌தினது‌க்கா அவரை போ‌லி‌ஸ் ‌பிடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போகுது.
ந‌ல்லது‌க்கே கால‌மி‌ல்லை‌ போ..
‌நீ‌ங்க வேற? அ‌ந்த க‌‌ட்டிட‌த்‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர் கா‌ப்பா‌த்‌தி வெ‌ளிய கொ‌ண்டு வ‌ந்ததா சொ‌ல்றவ‌ங்க 6 பேரும் தீயணைப்புப் படை வீரர்களாம்.
--------------------------------------------------------------------------------
மகன் : அப்பா! என்ன அடி‌க்க மா‌ட்டீ‌‌ங்களே...
அ‌ப்பா : எது‌‌க்கு?
மக‌ன் : நா‌ன் எல்லா சப்ஜெக்ட்லயும் ஃபெயிலாயிட்டேன்.
அப்பா : நினைச்சேன்! எக்ஸாம்லேர்ந்து அரைமணி நேரத்துல வீட்டுக்கு வந்துட்டு எல்லார்ட்டயும் "ரொம்ப ஈ.சி. டூ சிம்பிள்.." அப்படீன்னு கமெண்ட் அடிச்சப்பவே...
--------------------------------------------------------------------------------
ஒருவ‌ர் : ‌நீ‌ங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடி‌ச்சானே அ‌ப்புறமு‌ம் ஏ‌ன் தொட‌ர்‌ந்து பாடு‌றீ‌ங்க
பாடியவ‌ர் : ஒரு செரு‌ப்ப ‌வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு நா‌ன் எ‌ன்ன ப‌ண்றது? அது‌க்கு‌த்தா‌ன்.
--------------------------------------------------------------------------------
நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவ‌ர் பேசிக்கொண்டிருந்தார்.

நண்பர் கேட்டார்... 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?
என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
--------------------------------------------------------------------------------
நண்பர் : "டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொன்னதுக்காக உங்க அம்மா பெரிய வெங்காயம் வாங்காம சின்ன வெங்காயம் வாங்கறதப்பாத்தா எனக்கு எரிச்சலா வருது.
--------------------------------------------------------------------------------
சார் நீங்க செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா செஞ்சு போடணும்.
நான் செருப்பு போடறதுல்ல. ஷுவா தெச்சுக்குடுங்க.
--------------------------------------------------------------------------------
ஒயின் ஷாப்ல வேலைக்குச் சேந்தானே உன் பையன் சம்பளம் ஒழுங்கா வருதா?
சம்பளம் எங்க வருது சரக்குதான் வருது.
--------------------------------------------------------------------------------

காதலன் :உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
காதலி : ஏன் டார்லிங்..?
காதலன் : திருப்பிக் கொடுக்கறதே இல்லியே.
--------------------------------------------------------------------------------
நண்பர் 1:உன் பொண்ணு ஓடிப்போனப்ப கௌரவம் சிவாஜி மாதிரி "கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு ஆத்த விட்டு பறந்து போயிடுச்சு" அப்டீன்ன இப்ப உன் பையன் 30 வயசாகியும் வேலைக்கு போகாம வீட்லயே உட்கார்ந்திட்டுருக்கானே இதுக்கு என்ன சொல்லப்போற?"

நண்பர் 2 : "கொரங்குக்கு கால் ஒடஞ்சுபோச்சு ஆத்லயே உக்காந்துட்டுருக்கு."

--------------------------------------------------------------------------------

தந்தை : ஏன் சார் பையன அடிச்சீங்க . . . அப்படி என்ன தப்பு செஞ்சான்?
ஆசிரியர் : காக்கை குருவி எங்கள் ஜாதின்னு பாரதியார் பாடியிருக்காரே . . . அப்ப காக்கா குருவியெல்லாம் ஐயரான்னு கேட்டா உங்க பையன என்ன கொஞ்சுவாங்களா?
--------------------------------------------------------------------------------
ஆசிரியர் : அரசாங்கத்துக்கும் ராபின்ஹுட்டிற்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:பணக்காரங்க கிட்ட புடுங்கி ஏழைக்கு கொடுக்கறவன் ராபின்ஹுட். ஏழைங்க கிட்ட புடுங்கி பணக்காரங்க கிட்ட கொடுத்தா அது அரசாங்கம்.
ஆசிரியர் : ????
--------------------------------------------------------------------------------
அ‌ந்த போ‌லி‌ஸ்கார‌‌ர் டே‌பி‌‌ள்ல ஏடிஎ‌ம்- னு எழு‌தி வ‌ச்‌சிரு‌க்காரே, அ‌ப்படி‌ன்னா?
அ‌ப்படி‌ன்னா... எ‌னி டை‌ம் மா‌மூ‌ல்-னு அ‌ர்‌த்த‌ம்.
இது கூட‌த் தெ‌ரியாமலா இ‌ங்க வேல பா‌க்குற?
--------------------------------------------------------------------------------
சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்
அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?
10000 ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.
--------------------------------------------------------------------------------
சர்தார்ஜி ஒரு கடைக்கு போனார். அங்க இருந்த பொருளைப் பாத்து இந்த டிவி என்ன விலைன்னு கேட்டார். அதற்கு அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜி சரின்னுட்டு வெளியே போய் தன்னுடைய தல முடியெல்லாம் வெட்டிட்டு 'கெட் அப்பை' மாத்தி அதே கடைக்கு வந்தார்.
அதே பொருளைக் காட்டி 'இந்த டிவி என்ன விலைன்னு' கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
அவன் கிட்ட எப்படி கரெக்டா நான் சர்தார்ஜின்னு கண்டுபிடிக்கிறேன்னு கேட்டார்.
அதற்கு அவன் நீங்கள் விலை கேக்கறது டிவி இல்ல மைக்ரோவேவ் ஓவன் அப்டின்னான்.
--------------------------------------------------------------------------------
பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌ஸ் அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலி‌ஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு.

--------------------------------------------------------------------------------

கார் ஒன்று வேகமாக போய்க்கொண்டிருப்பதை டிராபிக் போலிஸ்காரர் பார்த்தார். அதனை தனது பைக்கில் விரட்டினார். போலிஸ் துரத்துவதைப் பார்த்ததும் அவன் இன்னும் வேகமாக ஓட்டினான். ஏறக்குறைய இரண்டு மணி நேர துரத்தலுக்குப் பின், போலிஸ்காரர் அவனை மடக்கிப் பிடித்தார்.
“ஏன் வேகமாகப் போனே? என்னைப் பார்த்ததும் நிக்காம, இன்னும் வேகமாகப் போனது எதுக்கு?”
“போனவாரம் என் மனைவி ஒரு போலிஸ்காரரோட வீட்டை விட்டுப் போயிட்டா! நீங்க தான் அவரோன்னு தப்பா நினைச்சிட்டேன்!”
“அதுக்கு எதுக்கு நிக்காமப் போகனும்?”
“இல்லை, நீங்க அவளைத் திருப்பித் தர வந்திருக்கீங்களோன்னு நினைச்சிட்டேன்!
--------------------------------------------------------------------------------
பக்கத்து வீட்டுக்காரி:உன் மாமியாரை 6 பேரு சேர்ந்து அடிச்சுகிட்டிருக்காங்க, நீ என்ன வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கே? போய் உதவி ஏதும் செய்யலையா?

மருமகள்: ஏற்கனவே 6 பேரு இருக்காங்க, என்னோட உதவி அவங்களுக்குத் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்!
பக்கத்துவீட்டுக்காரி: ???????????????????
--------------------------------------------------------------------------------
“என்னங்க! இன்னிக்கு அதிர்ஷ்டவசமா எங்கம்மா ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பிச்சாங்க. மணிக்கூண்டு வழியா சந்தைக்கு அவங்க போயிருக்காங்க. மணிக்கூண்டை அவங்க கடந்த அடுத்த நிமிடமே, அந்தப் பெரிய கடிகாரம் மேலிருந்து தரையில் விழுந்து உடைஞ்சிருக்கு..”
“எனக்குத் தெரியும், பாழாய்ப்போன அந்த கடிகாரம் எப்பவுமே லேட்டுன்னு”
--------------------------------------------------------------------------------
மருத்துவர் நோயாளியின் கணவரிடம் : உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க..
கணவர் : பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷன் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா?
மருத்துவர் : ????
--------------------------------------------------------------------------------
நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே....?’
'ஹி...ஹி...ஆமாம்! அந்த சின்ன விஷயத்துக்குப் போய் நன்றி சொல்ல வந்தீங்களாக்கும்...?’
'அதுக்கில்லேங்க.......பையன் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்தானாமே..அதை நீங்க எடுத்தீங்களா?’
--------------------------------------------------------------------------------
ஆசிரியர்: அமேசான் காடுகளில் இருக்கிற பழங்குடியினர் இலைகளாலான உடையைத் தான் அணிகின்றனர்.
மாணவன்: சார்! இலையுதிர்காலத்தில் அமேசான் காடுகளுக்கு சுற்றுலா போகலாமா?
--------------------------------------------------------------------------------
அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”
இந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.”
--------------------------------------------------------------------------------
வாழ்க்கை என்பது டெஸ்ட்
வாழ நினைப்பது பெஸ்ட்

எதிலும் வரணும் ஃபர்ஸ்ட்
அதுவரை எடுக்காதே ரெஸ்ட்

தேள் கொட்டினால் வலிக்கும்
முடி கொட்டினால் வலிக்குமா?
--------------------------------------------------------------------------------
செக்யூரிட்டி: மேனேஜர் ஏன் கோபமாக பேசிட்டுப் போறார்?

டிரைவர் : சடன் பிரேக் போடும்போது பார்த்துப் போடுன்னார்

செக்யூரிட்டி:நீ அதுக்கு என்ன சொன்ன?

டிரைவர்:பிரேக் போடும்போது ஒங்களை எப்பிடித் திரும்பிப் பார்க்க முடியும் சார்?ன்னு கேட்டேன்.
--------------------------------------------------------------------------------
பில்லி, ஏவல், சூனியம்ங்கறதை எல்லாம் நம்புறீங்களா?
"பில்லி, ஏவல் - சூனியம்ங்க றதை நம்புறேன்.'
அவ்வளவு பெரிய நகரத்துல ஒரு வீடுகூட இல்லடா? ஆச்சர்யமா இருக்குதா? நான் பார்த்தது "மேப்'லடா!
--------------------------------------------------------------------------------
ஏன் தம்பி படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்கே?

மூடி வைக்கணும்னு இருக்கேன்.
--------------------------------------------------------------------------------
மாலையில் சோர்வாக வீட்டுக்குத் திரும்ப பீட்டர் காலிங் பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்த அவனுடைய மனைவி ஸ்டெல்லா உடனே பொசுக்கென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
"என்னாச்சு ஸ்டெல்லா... ஏன் அழுவுற?''
"உங்கம்மா என்னை அவமானப்படுத்திட்டாங்க...''
"எங்கம்மாவா? அவங்கதான் வெளிநாட்டில இருக்காங்களே... அப்புறம் எப்படி?''
"இன்னைக்கு காலையில உங்க பெயருக்கு ஒரு லெட்டர் வந்தது. ஆர்வத்துல பிரிச்சிப் படிச்சிட்டேன்...''
"எனக்கு வந்த லெட்டர்தானே படிச்சே அதுல என்ன தப்பு?''
"அந்த லெட்டரோட கடைசியில உங்க அம்மா, "ஸ்டெல்லா இதை நீ படிச்சவுடனே மறக்காம என் மகன் படிக்கிறதுக்கும் கொடு'ன்னு எழுதியிருக்காங்க!'
--------------------------------------------------------------------------------
ஒரு நாள் பணம் கொடுத்தா போதும்,முப்பது நாளும் விடாம அர்ச்சனைதான்!''
"எந்தக் கோயில்ல?''
"என் வீட்டுலதான். ஒண்ணாம்தேதி சம்பளத்த கொடுத்ததும் அர்ச்சன தொடங்கினாள்ன்னா மாசம் முடியறவரைக்கும் விடமாட்டா...
--------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் முன்னேற நினைப்பவன் வழியைத் தேடுகிறான்..
அதைக் கடைப்பிடிக்க மறந்தவன் காரணத்தைத் தேடுகிறான்
நீ நேசிப்பவர்களுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு
ஆனால் எதற்காகவும் நேசிப்பவர்களை விட்டுக் கொடுக்காதே!
--------------------------------------------------------------------------------
காதலன் : கலா நல்லவேளை,,, 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே ,,,, காதலி : இல்லாட்டி ?
காதலன் : 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்,,,, ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே...
--------------------------------------------------------------------------------
ரமனன் : அவர் ரொம்ப குண்டு தான் ஆணா அதுக்காக அந்த ஹோட்டல்ல அவரை இப்படி அவமானப்படுத்தியிருக்கக் கூடாது
பாக்கி : அப்படி என்ன பண்ணீங்க
ரமனன் : மெனுவுக்கு பதிலா "கொடேஷன்" குடுத்தாங்களாம்.
--------------------------------------------------------------------------------
நண்பர் 1 :என்னங்க இது .. .. உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுட்டு,
புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே அதைச் சுத்திச் சுத்தி வரான் .. .. ?
நண்பர் 2 : அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டிருக்கான் .. .
--------------------------------------------------------------------------------
வீட்டுக்காரர் : உன் கைப்பக்குவத்தை சாப்பிட்டு என் உடம்பு எடை கூடிடுச்சு பொன்னம்மா ,,, பாரேன்,,, தொந்தி கூட வந்தாச்சு ,,,,
வேலைக்காரி : இதையே எங்க வீட்ல என் பொண்ணு கையால சாப்பிட்ட உங்க மகனும் சொன்னாருங்க எஜமான்.
--------------------------------------------------------------------------------
தொண்டர் 1 : ஆட்சியைக் கலைச்சுட்டு திரும்பின நேரம் தலைவருக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு .. ..
தொண்டர் 2 : அப்படியா .. .. என்ன பேர் வெச்சிருக்கார் .. .. ?
தொண்டர் 1 : கலை-ச்செல்வன், கலை-யரசி .. .
--------------------------------------------------------------------------------
தலைவர் :சென்ற முறை வெற்றி பெற்ற பிறகு தொகுதியை வந்து பார்க்கவில்லை என
கோபப்படுகிறீர்களே .. .. டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, இந்திய
வரைபடத்தில் எத்தனை முறை நம் தொகுதியைப் பாரத்துக் கண்கலங்கியிருக்கேன்
தெரியுமா .. .. ?
--------------------------------------------------------------------------------
மனைவி : வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க,,,,
கணவன் : நீ என்ன சொன்னே ?
மனைவி : ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.
--------------------------------------------------------------------------------
தொண்டர் 1 : இந்தத் தடவை தலைவர் தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க தொகுதிக்கு வர மாட்டாராம் .. ..
தொண்டர் 2 : வழக்கமா தேர்தலுக்கு அப்புறமதானே தொகுதிக்கு வரமாட்டாரு .. .. ஏன் இந்தத் தடவை மாத்திட்டாரு .. ..?
--------------------------------------------------------------------------------
தொண்டர் 1 : அரசியல்ல புதுமை பண்ணறதுக்கு ஒரு எல்லையே இல்லை நம்ம தலைவருக்கு .. ..
தொண்டர் 2 : ஏன் .. .. .. ?
தொண்டர் 1 : எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கப் போறோம்கற விஷயத்தைத் தேர்தலுக்கப்புறம் அறிவிக்கப் போறாராம்.

--------------------------------------------------------------------------------

ஒருவர் : சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.
மற்றொருவர் : எப்படிச் சொல்றீங்க ?
ஒருவர் : ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.
--------------------------------------------------------------------------------
திருடன் : என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.
நீதிபதி : எப்படி ?
திருடன் : ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.
--------------------------------------------------------------------------------
நண்பர் 1 : தீபாவளிக்கு ரிலீசாகற படங்கறதால இந்த மாதிரி சீன் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.
நண்பர் 2 : என்ன சீன்?
நண்பர் 1 : ஹீரோயின் தொப்புள்ல சங்குச் சக்கரம் விடறமாதிரி!
--------------------------------------------------------------------------------
வேலு : "விசிடி கடையெல்லாம் மூடினதால நம்ம டைரக்டர் கை ஒடிஞ்ச மாதிரி ஆயிட்டார்"
ரமனன் : "ஏன் இவங்கதானே திருட்டு வி.சி.டி.ய ஒழிக்கனும்னு குதிச்சாங்க?"
வேலு : "தமிழ் சிடிக்கள மட்டும்தான் சொன்னாங்க இங்கிலீஷையும் ஒழிச்சுட்டா எதப்பாத்து இவர் படம் எடுக்க முடியும்"
--------------------------------------------------------------------------------
கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்
பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?
--------------------------------------------------------------------------------
நண்பர் 1 : நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க?
நண்பர் 2 : சரியா சொல்லனும்னா 10 கிலோ 300 கிராம்.
--------------------------------------------------------------------------------
ரானி : தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
வேனி : தெரியலையே .. .. என்னது ?
ரானி : தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
--------------------------------------------------------------------------------
டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
நோயாளியின் மனைவி : எப்படி சொல்றீங்க?
டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!
--------------------------------------------------------------------------------
ஒருவர் : டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்ல.
மற்றொருவர் : மேல உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு.
--------------------------------------------------------------------------------
பாபு : அவர் ஏன் காரை ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.
கோபு : காரை விக்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம்.
--------------------------------------------------------------------------------
ரமனன் : என்னப்பா இது எலக்ட்ரிக் ட்ரெயின் டிரைவர போய் ஈவ் டீசிங் கேஸ்ல புடிச்சுட்டு வந்திருக்கீங்க?
வேலு : லைன்ல நடந்து போய்ட்டு இருந்த காலேஜ் பொண்ணு மேல ட்ரயினால மோதிட்டாராம்.
--------------------------------------------------------------------------------
பாக்கி : டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு!
டாக்டர் : நீங்க சொல்லவே வேண்டாம் எங்கிட்ட நீங்க வந்ததவச்சே புரிஞ்சுக்க முடியும்.
--------------------------------------------------------------------------------
நண்பர் 1 : இதோ தர்றேன் அவசரப்படாதீங்க எல்லாருக்கும் உண்டு அப்டீன்னு 100, 200ன்னு ரூபாய அள்ளி வீசுறாரே அவர் என்ன பெரிய கோடீஸ்வரரா?
நண்பர் 2 : நீ வேற வாங்கின கடனை திருப்பி வாங்க சம்பளத்தன்னிக்கி ஆபிஸ்க்கே கடன்காரங்க வந்திருக்காங்க.
--------------------------------------------------------------------------------
ஒருவர் : அந்த சலூன் கடைக்காரரை ஏன் கைது செஞ்சாங்க?
மற்றொருவர் : "தலை சீவிட்டாராம்"
--------------------------------------------------------------------------------
கோபு : 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க எழுதின கதையப் படிச்சதும் நீங்களா இப்டி எழுதியிருக்கீங்கன்னு ஆச்சரியமா இருந்தது.
பாபு : உங்களுக்காவது ஆச்சரியம் எனக்கு சந்தேகமா இருந்தது.
--------------------------------------------------------------------------------
ரமனன் : என்னது நம்ம பத்திரிகை ஆபீஸ்லேந்து திருடிட்டு போனவன் திருப்பி பார்சல் அனுப்பியிருக்கானா?
பாபு : அதை ஏன் கேக்கறீங்க? பத்திரிகைக்கு வந்த கதையெல்லாம் படுகண்றாவியா இருக்குன்னு திருப்பி அனுப்சுட்டான் சண்டாளன்.
--------------------------------------------------------------------------------

மனநல ஆசிரியர் : "தம்பி அங்க பாரு பசங்களெல்லாம் பந்த எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விளையாடறாங்க நீ மட்டும் இப்டி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு."
மாணவன் : "அய்யோ! நான் தான் கோல் கீப்பர் சார்."
--------------------------------------------------------------------------------
நண்பர் 1 : சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
நண்பர் 2 : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்
--------------------------------------------------------------------------------
கோபு : ஓட்டப்பந்தயத்துல தங்க மெடல் வாங்கினா "ஊக்க மருந்து"ன்னு சொல்லி தடை செஞ்சிடுறாங்க. சரி கடைசில வந்தவங்களையும் ஏன் செக் பண்றாங்க?
பாபு : இவங்க ஏதாவது "தூக்க மருந்து" சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.
--------------------------------------------------------------------------------
நண்பர் 1 : பரவாயில்லையே நாங்க எவ்வளவு அடிச்சும் உங்க பையனுக்கு "ழ" வரவே இல்லை. இன்னிக்கு கரெக்டா சொல்றானே. என்ன செஞ்சீங்க?
நண்பர் 2 : நீங்க எவ்வளவு அடிச்சும் வராத "ழ" அவன் தண்ணியடிச்சதும் தானா வந்துடுச்சு.
--------------------------------------------------------------------------------
ஒருவர் : லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமில்ல?
மற்றொருவர் : டிரிங்க்ஸ் குடிக்கறப்ப ஜூஸ் சிந்திடுச்சி சார்!
--------------------------------------------------------------------------------
கணவன் : "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"
மனைவி : "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."
--------------------------------------------------------------------------------
மகன் : அப்பா பைத்தியம்னா என்னப்பா?
தந்தை : சம்பந்தா சம்பந்தமில்லாம நீளமா எதையாவது உளறிகிட்டே இருப்பாங்க பேசறது எதுவுமே புரியாது என்ன புரிஞ்சுதா?
மகன் : சுத்தமா புரியலையேப்பா . . .
--------------------------------------------------------------------------------
ஆசிரியர் : துரியோதனன் தன்னோட உயிர தொடைலதான் வச்சுண்டுருந்தானாம்.
மாணவன் : இதென்ன சார் பெரிய விஷயம் நம்ம கிளாஷ் ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
--------------------------------------------------------------------------------
அப்பா : டேய் உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.
மகன் : ஏன் கடன் வாங்கலாமே . . .
--------------------------------------------------------------------------------
நண்பர் 1 : "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"
நண்பர் 2 : "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.
--------------------------------------------------------------------------------
போலிஸ் : டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?
திருடன் : கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா ஐயா?
--------------------------------------------------------------------------------
நோயாளி : "டாக்டர் மயக்க ஊசி போடாம ஆபரேஷன் செய்றீங்க. எனக்கு பயங்கரமா வலிக்குது."
டாக்டர் : கொஞ்சம் பொறுத்துக்குங்க. கொஞ்ச நேரத்துலதான் "எல்லாமே" முடிஞ்சுடுமே."
--------------------------------------------------------------------------------
நீதிபதி : ஏன் இப்படி கைதிகளை முதுகு வளைஞ்ச நிலைலே கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க இப்படியா ட்ரீட் பண்றது?
போலிஸ் : நாங்க மடக்கி பிடிச்சதுல இது மாதிரியாயிடுச்சு சார்.
--------------------------------------------------------------------------------
நீதிபதி : கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம் . . . இதுல என்ன திமிர் இருந்தா 1000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே . . .
குற்றவாளி : என்ன செய்யறது எஜமான் . . . தண்ணியடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா "0001"ன்னு அடிச்சிட்டோம் . . .
--------------------------------------------------------------------------------
மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."
--------------------------------------------------------------------------------
வேலு : யாரது டெய்லி ராத்திரி 2 மணிக்கு வந்து உங்கள கூட்டிட்டு போறது?
ரமனன் : என் பிரண்டுதான். அவனுக்கும் தூக்கத்துல நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால நான் தான் ஒரு கம்பெனிக்காக வந்து எழுப்பச் சொல்லியிருக்கேன்.
--------------------------------------------------------------------------------

ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்
நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.
--------------------------------------------------------------------------------
எடை பார்க்கும் மிஷின்
நம்ம சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை தனது எடையய் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தது. ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது.
உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.
எடை 0 என்று.
--------------------------------------------------------------------------------
தொலைபேசி அழைப்பு
சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சாந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.
துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.
50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.
25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.
10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சாந்தா அல்ல பாந்தா என்று.
--------------------------------------------------------------------------------
ஓவியம் அல்ல கண்ணாடி
ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்
"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"
--------------------------------------------------------------------------------
கொலஸ்ட்ரால் எங்கே?
ஒரு
முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க
சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம்
வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார்.
கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
'சாரி,
கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே
சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற
முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட
ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த
பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க
முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த
பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."
--------------------------------------------------------------------------------
பந்தயம் கட்டிய சர்தார்
சோகமே
உருவாக உட்கார்ந்திருந்த பந்தா சிங்கிடம் அவருடைய நன்பர் அருகில்
வந்தமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அதற்க்கு பந்தா சிங்,
தான் பந்தயத்தில் ரூ.800 தோற்று விட்டதாக சொன்னார். நன்பர் எப்படி 800
ரூபாயை தொலைத்தாய் என்றதற்க்கு சர்தார் பந்தா சிங் சொன்னார், "நேற்று
நடந்த இந்திய-இலங்கை கிரிகெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும் என ரூபாய்
400 பந்தயம் கட்டினேன், ஆனால் இந்தியா தோற்று போய் விட்டது.." என்றார்.
நன்பர், "சரி மீதி ரூ.400 எப்படி தொலைந்தது?" என்றதற்க்கு பந்தா சிங்
சொன்னார், "அன்றிரவு பார்த்த ஹை-லைட்டிலும் பந்தயம் கட்டினேனே.." என்றார்.
--------------------------------------------------------------------------------
எய்ட்ஸ் பயமா?
ஒரு
முறை சர்தாரும் நண்பர்களும் (சர்தாரல்லாத) இரவில் தெரு வழியே வந்துக்
கொண்டிருந்த போது ஒரு வழிபறியிடம் மாட்டிக் கொண்டனர். வழிபறி தன் கையில்
டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய்
உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த
போவதாகவும் மிரட்டினான். பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம்,
கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கலட்டி கொடுத்து விட்டனர்.
ஆனால் நம் சர்தார் மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார்.
கோபமான வழிபறி ஊசியால் சர்தார் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான். சர்தார்
கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், சர்தாரிடம் "ஏன் இப்படி செய்தாய்,
இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு சர்தார் கூலாக
சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே"
என்றார்.
--------------------------------------------------------------------------------
ஸ்மைல் ப்ளீஸ்
ஒரு
சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து
அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர் "ஏங்க அவரைப்
போட்டு அடிக்கறாங்க?" என்று மற்றொருவரைக் கேட்கிறார். "பின்ன என்னங்க?
இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன
செய்வார்களாம்?".
--------------------------------------------------------------------------------
நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி
சர்தார்ஜி
ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார்.
இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை
அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு
சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங்
அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”. யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி
கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு
இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.
--------------------------------------------------------------------------------
கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி
சர்தார்ஜி:
ஒரு கண்ணாடி குடுங்க... கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல
என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி
வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது.. சர்தார்ஜி: சூப்பர். முதல்ல
அதுக்கு பில் போடுங்க.
--------------------------------------------------------------------------------
கொசுவலையுடன் போர்
இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று.ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்க்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் சிக்கொல்லும் ஒரு வகை மருந்து) சியிருந்தேனே" என்றார்.
--------------------------------------------------------------------------------
எத்தனை கோழி?
ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.
சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"
நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."
சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?
நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"
சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."
--------------------------------------------------------------------------------
அடி வாங்கிய சர்தார்கள்
இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.
முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".
'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார்.
"என்ன, புடவையை துக்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".
--------------------------------------------------------------------------------
இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நுறு கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."
--------------------------------------------------------------------------------
ஏன் குதிக்கிறாய்?
தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்த சர்தாருக்கு தெரு ஓரத்தில் குதித்துக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்ததும் அவனருகில் சென்று பார்க்க ஆர்வம். அந்த ஆள் ரோட்டில் இருந்த மேன்-ஹோல் மூடியின் மீது இருபத்தி மூனு.. இருபத்தி மூனு.. என்று எண்ணிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான்.
சர்தார் ஆர்வம் தாங்காமல் அவனிடம் போய், என்ன விசயம் இருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், நான் என்னவென்று சொல்வதைவிட நீயே போய் உள்ளே பார்த்தால் நல்லா தெரியும் என்று சொன்னான். சர்தாரும் குழிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க உள்ளே இறங்கினார். அவ்வளவுதான், அந்த ஆள் உடனே மேன்-ஹோலை மூடியை போட்டு மூடிவிட்டு அதன் மேல் ஏறி மறுபடியும் குதிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் இந்த முறை இருபத்தி மூனுக்கு பதில், இருபத்திநாலு.. இருபத்திநாலு.. என்று எண்ணத் தொடங்கினான்
--------------------------------------------------------------------------------
எது என் குதிரை..?
குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு
பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து
விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார். அதுபோல்
ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில்
இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால்,
அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது
இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும்
வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக்
கொண்டு நின்றது. இதைப்பார்த்து கவலைப்பட்ட சந்தா சொன்னார், "சரி இனி
சிகப்பு குதிரை உன்னது, வெள்ளை என்னது"
--------------------------------------------------------------------------------
வேலை வாய்ப்பகத்தில்...
அரசு
பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி
செய்துக்கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து
பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த
இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு
முறை குறிப்பிட்டார்.இதை
கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது
பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார்,
'ஆண்/பெண் NN blem' என்று திருத்தி எழுதினார். அதற்க்கு பிறகு Salaaa
EEEecced: என்ற இடத்தில் 'Yee' என்று எழுதினார். விண்ணப்பத்தின் கீழ்
பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு (IIIIIIcciii),
உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன்
என்னாச்சு கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார்
சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை
அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார்.
அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு
காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்க்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill
The Application In Capital" என்று எழுதியிருந்தது..
--------------------------------------------------------------------------------
என்னையா முந்துகிறாய்..
ஒரு
இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம்
செய்துக்கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு
ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால்
விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க
முடிவு செய்தனர். முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை
பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார்.
அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை
பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக
அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு
குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப்
போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ்
நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே
சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்"
என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த
சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு
பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு
விட்டார்..
--------------------------------------------------------------------------------
எத்தனை இட்லி?
ஒரு
முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார்.அப்போது
ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர்.
நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும்
வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார்
சொன்னார், 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார். உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..
சர்தார்
அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன்
தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில்
எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி
சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார்
கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல
ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.

--------------------------------------------------------------------------------

பள்ளிக்கூட நகைச்சுவை! (School Jokes)
+++++++++++++++++++++++++++++++
1
வாத்தியார்: உன் பெயர் என்ன?

மாணவன்: மை நேம் ஈஸ் சூரஜ் பிரகாஷ்

வாத்தியார்: தமிழில் கேட்டால், தமிழில்தான் பதில் சொல்ல வேண்டும்

மாணவன்: என் பெயர் சூரிய ஒளி!
............................................................................
2

வாத்தியார்: 1869ல் என்ன நடந்தது?

மாணவன்: காந்திஜி பிறந்தார்!

வாத்தியார்: 1873ல் என்ன நடந்தது?

மாணவன்: காந்திஜிக்கு நான்கு வயது?
....................................................................
3
வாத்தியார்: காந்திஜியின் அஹிம்சை போராட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் நமக்கு என்ன கிடைத்தது?

மாணவன்: ஒரு நாள் விடுமுறை கிடைத்தது!
...................................................................
4
வாத்தியார்: ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒத்த நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணம் கூறு
(give an example of Coincidence)

மாணவன்: என்னுடைய அப்பா, அம்மா இருவருக்கும், ஒரே நாளில் ஒரே இடத்தில் திருமணம் நடந்தது!
...................................................................
5
வாத்தியார்: உன் அப்பாவிற்கு என்ன வயது?

மாணவன்: எனக்கு என்ன வயதோ அதுதான் என்னுடை அப்பாவின் வயது!

வாத்தியார்: அது எப்படி?

மாணவன்: நான் பிறந்த பிறகுதான் அவர் அப்பாவானார்!
...................................................................
6
வாத்தியார்: தவளை ஒன்று இருக்கிறது. கார் ஒன்று இருக்கிறது. உருளைக்கிழங்கின் விலை கிலோ முப்பது ரூபாய். அப்படியென்றால் என் வயது என்ன?

மாணவன்: 32 வயது!

வாத்தியார்: உனக்கெப்படித் தெரியும்?

மாணவன்: என் அக்காவின் வயது 16. அவள் ஒரு அரைக் கிறுக்கு. அதை வைத்து உங்கள் வயதைச் சொன்னேன்!

No comments:

Post a Comment