ப்ரியமானவள்
கிழித்துப் போட்ட
காதல் விண்ணப்பத்திற்கு
நடுவில் நிற்கும்
ஒருதலைக் காதலனை
நினைவுபடுத்துகிறது
குப்பைகள் சூழ நிற்கும்
சாயம்போன
தபால் பெட்டிகள்
*********************************
தபால்நிலையங்கள்
குறித்த
புகார்களையும்
ஆலோசனைகளையும்
அனுப்ப வேண்டிய முகவரி:
compliance@postoffice.com
********************************
வெஸ்டர்ன் யூனியன்
மணி ட்ரான்ஸ்ஃபர்கள்
பதினாறு இலக்க
எண்ணுடன்
மூன்றிலக்க
ரகசிய எண் கேட்கும்
கடன் அட்டை
பரிவர்த்தனைகள்
அலைபேசி
எண் அழுத்தலில்
கண்டம் தாண்டிப்
பயணிக்கும்
பணங்கள்
இன்னும்.. இன்னும்...
எத்தனையிருப்பினும்
இன்றும்
ஒவ்வொரு கிராமத்திலும்
ஒரு தாயாவது
காத்திருக்கிறாள்
மகனின்
மணியார்டருக்காக.
***************************************************
இப்போதெல்லாம்
எனக்கு
கடிதங்கள்
ஏதும் வருவதில்லை
என்ற வருத்தத்தைச் சொன்னேன்.
எங்களுக்கும்தான்
என்கிறார்
போஸ்ட் மாஸ்டர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment