சிரிக்கலாம் வாங்க...

சிரிக்கலாம் வாங்க...



எனக்கு மெயிலில் வந்த சில துணுக்குகள் இவை...

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட சொல்ல வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான்பா ராமு.

ராமு: பாப்க்கார்ன், அது தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது தெரியுமா?
சோமு: தெரியலையே...
ராமு: நீ உக்கார்ந்து பாரு... அப்ப தெரியும்....

வாத்தியார்: ஒரு “Compound Sentence" சொல்லுடா !
மாணவன்: “STICK NO BILLS”

வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

டிக்கெட் பரிசோதகர்: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
டிக்கெட் பரிசோதகர்: இது பழைய டிக்கெட்.
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
டிக்கெட் பரிசோதகர்: ......... ????

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" (ஓ) போட்டாங்க...

சிவப்பு விளக்குப் பகுதி!

சிவப்பு விளக்குப் பகுதி!


அபலைப்

பெண்களின்
அரண்மனை!
விடலைப்
பையன்களின்
விபத்துப் பகுதி!

நானும் உன்னில் ஒருவன் தானே ?
















உலகம்

உயிர்கள் தோன்றிய விதம் பற்றி
ஆய்வு நடத்தி கொண்டிருக்கையில்
என் பார்வையில் உலகம்...
கருவறை மாறியதால் மாறியது பல...
உன்னிலும் என்னிலும்..!

கைப்பிடித்து நீ நடை பழகையில்
நானும் நடை பழகினேன் !
கையேந்தி,
கடைத்தெருவில் !

நீ புசித்து போட்ட எச்சைக்கும்
கூட எனக்கு போட்டியாளன்
என் வயது நண்பன்-
தெரு நாய்!

நீ தாய்ப்பால் பருகையில்,
தண்ணீருக்கே வழியில்லாத
அவளிடம்,
எஞ்சிய
இரத்தமும் எனக்காய்
தாய்ப்பாலானது!

பிரசவத்தில் மட்டும்
நான் உன்னை விஞ்சினேன் !
ஆம்!
நான் சுகப்(?)பிரவசமாம் !
நீ சிசெரியனாம்!

***நாய் பூனைக்குப் பாலூட்டியதாம் !
***ஐந்து ரூபாய் தகராறில் அண்ணன்
அடித்துக் கொலை - செய்திகள் .
இதில் யாருக்கு ஐந்தறிவு ?
யாருக்கு ஆறறிவு ?
புரியவில்லை எனக்கு!

நாளைக்கு மூணுவேளை சாப்பிடணும்,
வரைமுறை உனக்கு !
நாளைக்காவது சாப்பிடவேண்டும்
என்று நான்!

எனக்கொன்றும் நான்
நீயாக வேண்டும்
என்றில்லை !
குறைந்தபட்சம் இத்தகைய
செய்திகளை கேள்விப்படாமல்
இருந்தாலே போதும்!

உலகப் பணக்காரனுக்கே
நாளைய நிலை எண்ணி
தினம் தினம் கலக்கம்!
உள்ளத்தால் பணக்காரனாய்
உணர்கிறேன் நான்!

கந்தையானாலும்
கசக்கிக்கட்டு !
கந்தையே இல்லையெனில் ?

கால் வயிற்று கஞ்சிக்கு
கால் தொட்டு தொழுகிறேன் !
கண நேரத்தில் உடல் முழுதும்
சேற்றை இறைத்தாய் உன் காரில்!

`அனைவருக்கும் கட்டாய கல்வி '
என்பதெல்லாம் அரசியல்
எந்த பள்ளியில் அனுமதிக்கிறார்கள்
என் போன்றவனை?

அத்தனையும் அதிகமாய்
கிடைக்கபெற்ற உங்களுக்குள்ளே இவ்வளவு
போட்டியும் பொறாமையும் !
எதுவுமே இல்லாமல் படைக்கப்பட்ட
என்னையும் உன்னுடன் கலந்தது
எந்த விதத்தில் நியாயம் ?

விடை தெரியாத வினாக்களாகவே
அமைந்தன அத்தனையும்!

நீ
கேட்பது சரிதான்!
சமுதாயத்தில்
காலங்காலமாய் புறக்கணிக்கப்பட்ட
எனக்கு இத்தனை கேள்விகள்
எழக்கூடாது !
எத்தனை என் போன்றவனை
பரிவு காட்டியது இந்த சமுதாயம் ?
என் மனம் நீ அறிந்து கொள்ள ....

எதுவாயினும்
பிறப்பிடம் தவிர்த்து
பிறப்பால் நானும் உன்னில் ஒருவன் தானே ?

வேற்றுமை...... உன்னிலும் என்னிலும் தான்!!

அதிகாலைப் பொழுது முதல்
அந்திசாயும் மாலை வரை
ஒவ்வொரு நொடியும்
உன்னடி பிடித்திடுவாள்!
உதறியபடி நீ
ஊதாரியாய் திரிந்திடுவாய்..

தன்வயிறு
காயினும்,
உன்வயிறு
நிறைத்திடுவாள்!

குற்றவாளி நீ
எனினும்,
உன் முகம்
காட்ட மாட்டாள்!

தலைவலி
கொடுப்பினும்,
இலையிட்டு
உணவளிப்பாள்!

கொலைப்பழி
விழினும்,
வழிசென்று
அழைத்திடுவாள்!

நீ குருதி காண்கிறாய்
ஒரு கொலையில்!
அவள்
உனக்குப் போய்
குருதியையே
உணவாக்கியவள்!

ஆம்!
தாய்மையில்
வேற்றுமையில்லை,
வேற்றுமை......
உன்னிலும் என்னிலும் தான்!!

பொன் மொழிக‌ள்


நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும் -கிரந்தம்.

பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி.

கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர்.

தவறு கூடுதலாயிருந்தால் பிடிவாதமும் அதிகமாக இருக்கும் -நெல்சன்.

தன் கணவருக்கு துன்பம் வரும்போது மனம் பதையாத பெண்கள் அவர் மடியில் நெருப்பிற்கு ஒப்பாவர் -அவ்வையார்.

தவறான பதிலைக்காட்டிலும் மவுனம் சிறந்தது.

எதிரியைவிட நாக்கையே அதிகம் அடக்க வேண்டும்.

வெற்றிக்கான சாலையில் தொடர்ந்து வேலை நடந்து வரும்.

கனவு காண்பதுடன் காரியத்தில் இறங்குவதே சாதனைக்கான சாலை.

சிறந்தவையெல்லாம் நல்லவையல்ல. நல்லவையெல்லாம் சிறந்தவையே.

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும் - கான்பூசியஸ்.

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - சுபாஷ் சந்திரபோஸ்

தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது இறைவனிடம்ட நம்பிக்கை இழப்பதாகும் - விவேகானந்தர்.

ஒவ்வொரு சாதனையும் மற்றவர்கள் முறியடிப்பதற்காகவே செய்யப்படுகின்றன - சுனில் கவாஸ்கர்

புத்தகங்கள் மனிதப் பிறவிகள் அல்ல. ஆயினும் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன - பென்னெட்.

உண்மை, அன்பு, அறம், ஒழுக்கம், அச்சமின்மை இவையே எனது வழிகாட்டிகள். இறைவனின் உண்மையான வடிவங்கள் இவையே - காந்திஜி.

செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டாது - கண்ணதாசன்.

உங்களுக்குத் தெரிந்த கல்வியை, கலையை அடிக்கடி உபயோகித்தால் அறிவும் செல்வமும் உயரும் - அப்பிரிக்க முதுமொழி.

துப்பறியலாம் வாங்க 3

துப்பறியலாம் வாங்க

உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் குற்றங்களை போலீசார் கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள், குற்றவாளி, போலீசாருக்கு மறைமுகமாக விடுக்கும் சவால். எவ்வளவு நுணுக்கமாக திட்டமிட்டாலும், சிறிய தவறுகள் இருக்கும். அதனை கண்டுபிடிக்க பல துறையை சேர்ந்த வல்லுனர்களின் உதவி தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு வழக்குதான் இது.

*****

1996 வருடம், அமெரிக்காவிலுள்ள போர்ட்லேண்ட். இது ஒரு மரங்களடர்ந்த அமைதியான பிரதேசம்.

ஒரு நாள் மதியம் 2 மணியளவில், வீடு ஒன்று பற்றி எரிவதைப் பார்த்த மக்கள், திகைத்து போனார்கள். தீயணைப்புப் படையினர் வந்து சேரும் போது, தீ வீடு முழுவதையும் சூழ்ந்திருந்தது. தீயை அணைக்க முயற்சி செய்தபோது, ஜான் அலறி அடித்துக் கொண்டு அங்கு வந்தார். அப்பொழுதுதான் அந்த வீட்டினுள் யாரோ மாட்டிக் கொண்டுள்ளார்கள் எனப் புரிந்தது. ஆனால் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது.

ஜான் பயந்தபடியே, வீட்டினுள், கருகிய நிலையில், மேரி பிணமாக இருந்தார். உடல் முற்றிலுமாக கருகியதால் அது, மேரிதான் என உறுதி செய்ய முடியவில்லை. உடலுக்கு அருகில் அவரது கைத்துப்பாக்கி இருந்தது.

ஜான், மேரி இருவரும் கம்பியூட்டர் வல்லுனர்கள். வேலை பளு காரணமாக, அவர்கள் வாழ அமைதியான இடம் தேவைப்பட்டது. அதனால் போர்ட்லாண்டிற்கு இடம் பெயர்ந்தனர். மேரி, பொழுதுபோக்குக்காக குதிரை வளர்த்தார். அவர்கள் அங்கு ஒரு இடம் வாங்கி வீடு கட்டத் தொடங்கினர். 90 சதவிகித வீடு கட்டிமுடியும் தருவாயில் இந்த கோர தீ விபத்து.

ஜானிடம் போலீஸ் விசாரணை செய்தபோது
”நான் வீட்டு பொருட்கள் வாங்குவதற்காக 2 மணி நேரத்திற்கு முன் கடைக்கு போயிருந்தேன். கிளம்பும் முன், துணிகளை காயவைக்க பயன்படும் டிரையர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த டிரையர், ப்ரோபனால் (Propanol) எனப்படும் இரசாயனப் பொருளால் இயங்கும். ஒரு வேளை தீ அதன் மூலம் ஏற்பட்டிருக்கலாம்”.

“உங்கள் முகத்தில் என்ன காயம் ?”

“இன்று காலை, வீட்டிற்கு அருகில் இருந்த முட்புதர்களை அகற்றும் போது இந்த காயம் ஏற்பட்டது”

“நீங்கள் அணிந்திருக்கும் டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் விசாரணைக்கு தேவைப்படுகிறது”. (இப்படி வாங்குவது விசாரணையின் வழக்கமான ஒரு அம்சம்)

போலீசார், ஜான் வாங்கிய பொருட்களின் பில்களை பார்த்து, தீ விபத்து நடந்த நேரம், அவர், கடையினில் இருந்ததை உறுதி செய்தனர்.

மேரியின் எலும்பை உபயோகித்து டி.என்.ஏ பரிசோதனை செய்ததில், இறந்தது மேரி தான் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் எப்படி இறந்தார் ? தீ விபத்தினாலா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? எப்படி கண்டுபிடிப்பது ?.

போஸ்ட்மார்டம் அறிக்கையில் இருந்த விபரங்கள் இவை
  • மேரியின் ரத்தத்தில் கார்பன் மோனாக்ஸைடு காணப்படவில்லை (அவர் மூச்சுவிடுவதை நிறுத்திய பிறகு அதாவது இறந்தபிறகு தான் வீடு தீப்பிடித்திருக்கிறது).
  • மேரியின் உடல் முற்றிலும் எரிந்து போனதால் உடலில் துப்பாக்கிச்சூடு காயங்கள் இருந்ததா என கண்டுபிடிக்கமுடியவில்லை.
  • மேரியின் மூச்சு குழாயில் ரத்தம் இருந்தது. (மேரி கடைசி முறையாக மூச்சை உள்ளிழுக்கும் போது காற்றோடு ரத்தமும் இருந்திருக்கிறது. அதற்கு ஒரே வாய்ப்பு, பலமாக தாக்கப்பட்டதால், உடலின் உள் உறுப்புகளிலிருந்து வந்த ரத்தம்)
இந்த காரணங்களை வைத்து மேரி இறந்தது தற்கொலையில்லை, கொலை என ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டது.

தீ விபத்துக்களில் முக்கியமாக தெரியவேண்டியது, எந்த இடத்திலிருந்து தீ உருவானது ? தீ ஆரம்பிக்க உதவிய பொருள் எது ? விபத்தா அல்லது மனிதனால் எழுப்பப்பட்ட தீயா ?. போலீசார் இதைக் கண்டுபிடிக்க முயன்றார்கள்.

ஜான் சொன்னபடி, ப்ரோபனால் வாயுவால் இயங்கும் துணி டிரையர் அல்லது மேரியின் காரில் இருந்த பேட்டரி இதில் ஏதோ ஒன்று தான் தீக்கு காரணம். ஆனால், பேட்டரியின் வயர்கள் இணைக்கப்படவில்லை. அதனால் தீ அங்கிருந்து உருவாகியிருக்க வாய்ப்பில்லை. அடுத்து டிரையர். அதை ஆராய்ந்த போது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

ஆமாம் ! ஜான் சொன்னது போல டிரையர் ஓடிக்கொண்டிருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ப்ரோபனால் வாயுக்குழாய், டிரையருடன் இணைந்திருக்கவில்லை.

ஜான் சொன்னது பொய் ???. ம்ம்.ம்ம்..அப்படியும் சொல்ல முடியாது. தீயணைப்பு படையினர் ஒருவேளை குழாயை எடுத்துவிட்டிருக்கலாமில்லையா ? இருக்கலாம் ! ஏனென்றால், அவர்களது ஒரே நோக்கம், தீயை அணைப்பது மற்றும் யாராவது சிக்கியிருந்தால் அவர்களை மீட்பது. அவர்கள், சம்பவம் நடந்த இடத்தில் எதையும் மாற்ற/தொடக்கூடாது என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

ஜான் சொன்னது நிஜமா ? அல்லது தீயணைப்பு படையினர் அதை கழட்டிவிட்டார்களா ?. அந்த குழாய் தடயவியல் நிபுணரிடம் அளிக்கப்பட்டது. ஆராய்ந்த போது 2 விஷயங்களை கண்டுபிடித்தார்

1. குழாய், டிரையரோடு இணையும் இடத்தில் ஆக்ஸிடேஷன் எனப்படுகிற ரசாயன மாற்றம் நிகழ்ந்திருந்தது. அதாவது, தீ எரியும் போது, குழாய் டிரையரோடு இணைந்திருக்கவில்லை.(மேலே உள்ள படத்தில் கருப்பாக இருக்கும் குழாய் ஆக்ஸிடேஷன் ஆனது. அருகிலிருக்கும் மற்றொன்று, தீ ஏற்படும்போது குழாய் இணைக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி, தீயால் பாதிக்கப்படாமல் வெள்ளையாக இருந்திருக்கும்)



2. குழாய் இணையும் இடத்தில் ஒரு துளி உலோகம் ஒட்டியிருந்தது. அந்த உலோகம், குழாயோடதில்லை. அது குழாய்க்கு மேலே இருந்த ப்ரோப்பனாலின் அளவை ஒழுங்குபடுத்தும் குமிழின் ஒரு பகுதி. இதன் மூலம் தீ அந்த இடத்தில் ஆரம்பித்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட அதிக வெப்பத்தால், அந்த குமிழ் உருகி, கீழேயிருந்த குழாயின் மேலே விழுந்திருக்கிறது (படத்தில் வட்டமிடப்பட்ட இடத்திலுள்ள மஞ்சள் நிற சிறு துளியை பாருங்கள்).

இந்த 2 ஆதாரங்களை வைத்து ஜான் சொன்னது பொய் என்பதை நிரூபித்தார்கள். மேலும், ஜானின் ஜீன்ஸில் இருந்த சின்ன கறை, ரத்தக் கறை, அதுவும் மேரியின் ரத்தமென்பதை டி.என்.ஏ சோதனை உறுதி செய்தது.

என்ன நடந்தது ?
ஜான், இன்டெல் நிறுவனத்தில் வேலை பார்த்தான். அவனது வேலை, போர்ட்லேண்டிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்திற்கு மாற்றப்பட்டது. மேரியும் தன்னுடன் வரவேண்டுமென நினைத்தான். ஆனால் மேரிக்கு போர்ட்லேண்டை விட்டு வர மனமில்லை. மேலும், மேரி, குதிரை வளர்ப்புக்காக அதிக செலவு செய்திருக்கிறார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை நடந்திருக்கிறது. அந்த சம்பவம் நடந்த நாளில், வாக்கு வாதம் முற்றி, மேரியை ஜான் தாக்க, அப்பொழுது ஏற்பட்ட சண்டையில் ஜானின் முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது, அந்த சண்டையின் முடிவில் மேரி இறந்துபோயிருக்கிறார். இதனை விபத்தாக மாற்ற முடிவு செய்த ஜான், வீட்டிற்கு வெளியே இருந்த ப்ரோபனால் சிலிண்டரை மூடிவிட்டு, வீட்டுக்குள் வந்து வாயுக்குழாய் இணைப்பை துண்டித்துவிட்டு, தீயை மூட்டிவிட்டு, பிறகு வீட்டுக்கு வெளியே வந்து ப்ரோபனால் சிலிண்டரை திறந்து விட்டிருக்கிறான். அப்பொழுது ஏற்பட்ட அதிக வெப்பத்தால் உலோகம் உருகி, குழாயின் மேல் பட்டிருக்கிறது.

ஜூரிகள், ஜான் குற்றவாளி என முடிவு செய்தனர். மனைவியைத் தாக்கியது (கொலை செய்தான் என ஜூரிகள் நம்ப மறுத்துவிட்டனர்) மற்றும் தீ மூட்டியது, இந்த 2 குற்றங்களுக்காக தண்டனை பெற்றான்.

ஜான் எவ்வளவோ திட்டமிட்டு, செய்த குற்றத்தை மறைக்க நினைத்தாலும், அறிவியல் வளர்ச்சியின் உதவியால், அவன் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

துப்பறியலாம் வாங்க2.

துப்பறியலாம் வாங்க.


பிரிட்டனில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்தவர்கள் ஜான், மேரி. ஜானுக்கு தொழில் விவசாயம். அமைதியான வாழ்க்கை.

ஒரு நாள் மேரி பக்கத்து நகரத்துக்கு போவதற்காக, காரில் ஏறி, இஞ்சினை ஸ்டார்ட் செய்ததும் ...பூம் !!!...கார் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு ஓடி வந்த ஜான், மேரி பலத்த தீக்காயங்களுடன் தரையில் தூக்கி வீசப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனையில் சேர்த்த பின் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் யார் இந்த பாம் வைத்தது ?. யார் அவருக்கு எதிரி ?. போலீஸ் விசாரணையில் அந்த பாம் துப்பாக்கித் தோட்டாக்களில் இருந்த வெடி மருந்துப் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. சீட்டுக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்ததால், கொலையாளியின் நோக்கம், காரை ஒட்டுபவரைக் கொல்வது. போலீஸ் விசாரணையில் ஜான் கையைக் காட்டியது, பக்கத்து வீட்டுக்காரரான டேவிட்டை. ஜானுக்கும் டேவிட்டுக்கும் இடையில் வேலி பிரச்சினை இருந்தது, அதன் பொருட்டு சில நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் டேவிட் இந்த குற்றத்தை செய்யவில்லையென நிரூபணமாகியது.

இந்நிலையில் ஒரு நாள் விடியற்காலையில், வீட்டுக் கதவை திறந்த ஜானுக்கு அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருந்தது.

வீட்டு வாசலில், வெட்டப்பட்ட ஒரு ஆட்டின் தலை மாட்டியிருந்தது. கூடவே “அடுத்தது நீ தான்” என்ற எச்சரிக்கை கடிதம். இதனைத் தொடர்ந்து மேலும் மிரட்டல் கடிதங்கள் வரவே, ஜானுடைய பாதுகாப்புக்காக சில போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள். நாட்கள் ஓடியது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதி, 1984ஆம் வருடம், போலீசுக்கு போன் வந்தது. பேசியது ஜான். “என்னை பக்கத்து வீட்டு டேவிட் கத்தியால் கொல்ல வந்தான். வேறு வழியில்லாமல், தற்காப்புக்காக, டேவிட்டை சுட்டுக் கொன்றுவிட்டேன்.”


வீட்டுக்கு வந்து சேர்ந்த போலீஸார், வீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீடு முழுவதும் சொட்டு சொட்டாக ரத்தம். முன்னறையில் டேவிட், தோட்டா காயத்துடன் செத்துக்கிடந்தார். கையில் கத்தியிருந்தது. ஒரு பெரிய சண்டை நடந்த தடயங்களாக, அங்கு இருந்த சேர், டேபிள் முதலானவை கவிழ்ந்து கிடந்தது. ஜான், வீட்டு சமையலறையின் பக்கத்தில் இருந்த வாஷ்பேசினில் தலையை சாய்த்தவாறு கிடந்தார். பக்கத்தில் அவரின் துப்பாக்கியிருந்தது. உடல் முழுவதும் ரத்தம். கைகளில் காயம் எதுவும் இல்லை, ஆனால் இடுப்பின் இடது முனையில் இருந்து குறுக்கே வலது தோள்பட்டை வரை ஒரு பெரிய கத்தி வெட்டு, முகத்தில் வாயில் இருந்து காது வரை வெட்டப்பட்டு, பார்க்கவே கொடூரமாக இருந்தது. பிறகு மருத்துவமனையில் 80 தையல் போடப்பட்டது என்றால் எந்த அளவுக்கு பெரிய காயமாக இருக்கவேண்டும் என கற்பனை செய்துகொள்ளுங்கள் (இப்பொழுது ஜானின் புகைப்படத்தை மறுபடியும் பாருங்கள், குறிப்பாக அவரது வலது காதிலிருந்து வாய் வரை உள்ள தழும்பு).

“என்ன நடந்தது ?”
“அன்று இரவு, என் மனைவி வெளியே போயிருந்தாள். அப்பொழுது பக்கத்து வீட்டு டேவிட் என்கிட்ட பேசனும்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள வந்தார். நான் போலீஸ்கிட்ட அவரைப் பற்றி ஏன் புகார் குடுத்தேன்னு கேட்டு சண்டை போட்டார். ஒரு கட்டத்துல அவர் கத்திய எடுத்து என்னை தாக்க ஆரம்பிச்சுட்டார்”

”அவர் உங்களை தாக்கும் போது நீங்க தடுக்க முயற்சி பண்ணுனீங்களா ?”.

ஆமாம், அவர்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்க எவ்வளவோ முயற்சி பண்ணுனேன் ஆனா அது முடியாம, என்னோட உடம்புல இவ்வளவு நீளத்துக்கு கீறிட்டார், என் முகத்துலயும் குத்திட்டார். அப்போ நான் தட்டு தடுமாறி பக்கத்து ரூம்க்கு ஓடிப்போய் என் துப்பாக்கிய எடுத்து சுட்டேன்”

போலீஸ் வீட்டை முழுவதுமாக சோதனை செய்து பல தடயங்களை சேகரித்தார்கள். ஜான் சொன்னது மாதிரியே வீடு முழுவதும் ரத்த காயங்களுடன் ஒடியதில், ரத்தம் பல இடங்களில் தெறித்திருந்தது. தடயவியல் நிபுணர்கள் நன்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு சொன்னது

“ஜானை அரெஸ்ட் பண்ணுங்க. ”



என்னென்ன தடயங்களை வைத்து ஜானை குற்றவாளி என சொன்னார்கள் ?

முதலாவதாக, சம்பவ இடத்தை பார்வையிட்ட, ரத்தங்கள் உண்டாக்கும் வடிவங்களை பற்றி படித்த நிபுணர்கள், வீட்டிலிருந்த ரத்த துளிகள் மேலே படத்தில் உள்ள சாம்பிள் A மாதிரி உருண்டை வடிவில் இருந்தது என்பதை பார்த்தார்கள். இந்த மாதிரி வடிவம் இருந்தால், ரத்தம் உடலிலிருந்து வரும்போது அந்த நபர் ஓரிடத்திலேயே நின்றிருக்கிறார் என்பது உறுதி. அப்படி இல்லாமல் சாம்பிள் B மாதிரி இருந்தால், அந்த நபர் ரத்தம் வடியும் போது நடந்து/ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது உறுதி. சாம்பிள் B-ல் உள்ள ரத்தம் உண்டாக்கிய வால் போன்ற வடிவம் முக்கியமானது. அதை வைத்து, அந்த நபர் எந்த வேகத்தில் நகர்ந்திருக்கிறார் எனக் கண்டுபிடிக்கலாம். இதன் மூலம், ஜான் சொன்னது போல, அவன் டேவிட்டிடம் இருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கவில்லை என்று முடிவு செய்தனர். ஜான், தன்னை தானே அறுத்துக்கொண்டிருக்கிறான்.

இரண்டாவதாக, டேவிட்டின் கையிலிருந்த ஜான் ஜோடனை செய்த கத்தியில், டேவிட்டின் ரத்தம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால், அவரில் கை முழுவதும் அவர் ரத்தம் இருந்தது.இதை வைத்து, ஜானை டேவிட் தாக்கவில்லை என முடிவு செய்தனர்.கத்தியை ஜான், டேவிட் இறந்தபிறகு வைத்திருக்கிறான்.

மூன்றாவதாக, ஜானின் கையில் கத்தியினால் ஏற்பட்ட எந்த காயமும் இல்லை. ஒருவன் நம்மை தாக்க வரும் போது, நம்மையறியாமல், நம் கைகள் தடுக்க முயற்சிக்கும். அப்படி ஜான் செய்திருந்தால், கண்டிப்பாக அவன் கைகளில் காயம் இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஜான் சொன்னது பொய் என நிரூபித்தனர்.

நான்காவதாக, ஜானின் உடலிலிருந்த காயத்தை பார்த்த டாக்டர்கள் “அவன் உடலில் இருந்த காயம் ஒரு நேர் கோட்டை, இடது இடுப்பிலிருந்து வலது தோள் பட்டை வரை வரைந்த மாதிரி இருக்கிறது. ஒருவனை கத்தியால் காயப்படுத்தும் போது, அவன் கண்டிப்பாக அசைவான். அப்படி அசைந்திருந்தால், இந்த மாதிரி நேர் கோடு போட்டது போல காயம் இருக்காது. அதனால், ஜானே, தன்னை கத்தியால் கிழித்திருக்கிறான்.”
மேலும், வீட்டின் வாஷ் பேஷினிடம் தேங்கியிருந்த ரத்தத்தின் அளவை வைத்து, ஜான், அதன் அருகில் நின்று தன்னை காயப்படுத்திக் கொண்டிருக்கிறான் எனக் கண்டுபிடித்தனர்.

ஐந்தாவதாக, தரையில் கவிழ்ந்துகிடந்த டேபிளுக்கு கீழே ரத்த துளிகள், சம்பவம் நடந்தபிறகு டேபிளை, ஜான் கவிழ்த்திருக்கிறான் என உணர்ந்தனர்.

ஆறாவதாக, டேபிளில் ரத்தக்கறையை பார்த்தார்கள். அது ஜானுடையது. ஆனால், அவன் டேவிட்டை சுட்ட துப்பாக்கியில், ரத்தக்கறை எதுவும் இல்லை. இந்த ஆதாரம், டேவிட், ஜானை தாக்குவதற்கு முன்பே, ஜான், டேவிட்டை சுட்டிருக்கிறான் என்பதை உறுதி செய்தது. நடந்தது என்னவென்றால், ஜான், டேவிட்டை, பேசவேண்டுமென வீட்டுக்கு கூட்டி வந்து, எதிர்பாராத தருணத்தில், சுட்டுக் கொன்றிருக்கிறான்.

ஜட்ஜ்க்கு இத்தனை ஆதாரம் போதுமானதாக இருந்தது. இரண்டு ஆயுள் தண்டனை, அவன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும், ஜெயிலில் கழிக்கப் போவதை உறுதி செய்தது. நீங்கள் இதை படிக்கும் போது, அவன் பிரிட்டனில் உள்ள ஒரு ஜெயிலில், தான் தப்பு தப்பாக செய்த தப்பை எண்ணி வருந்திக்கொண்டிருப்பான்.

இவ்வளவும் எதற்காக செய்தான் ?. பணம் !!!. அவன் பெரிய பணப்பிரச்சினையிலிருந்தான். அதிலிருந்து தப்பிக்க, தன் மனைவியைக் கொல்வதன் மூலம் கிடைக்கும் இன்ஸீரன்ஸ் பணத்தை உபயோகிக்க நினைத்திருந்தான். ஆனால், பாம் வெடித்ததில், தன் மனைவி தப்பியது பெரும் பிரச்சினையாக இருந்தது. அதனால், மிரட்டல் கடிதங்களை தனக்கு தானே அனுப்பி, பக்கத்து வீட்டுக்கார டேவிட்தான் மேரியைக் கொல்ல திட்டம் போட்டார் எனப் பொய்யாக நிரூபித்து, டேவிட்டை தீர்த்துக் கட்டுவதன் மூலம், டேவிட்டை குற்றவாளியாக ஆக்கிவிடலாம் என நினைத்ததின் விளைவு, இந்த கொலை, மற்றும் அதனைத் தொடர்ந்த நாடகம். ஒரு குற்றத்தை மறைக்க அவன் இன்னொரு குற்றத்தை உபயோகிக்க நினைத்தது தவறாக போய்விட்டது.

இந்த கேஸில், ரத்தத்தை ஆராயும் நிபுணர்கள் மற்றும் குற்றம் நடந்த இடத்தை ஆராய்ச்சி செய்யும் தடயவியல் நிபுணர்கள் பெரும் பங்குவகித்தனர்.

துப்பறியலாம் வாங்க

துப்பறியலாம் வாங்க


ஜீலை, 2000 வது வருடம், ஜான் மற்றும் ரெட் மீன் பிடிப்பதற்காக, லூசியானவில் உள்ள கடலுக்கு சென்றார்கள். ஜான், ரெட்டிடம் வேலை பார்த்து வந்தான்.அன்று வீசிய புயலில் சிக்கி, அவர்கள் பயணம் செய்த போட் கவிழ்ந்ததில் ரெட் இறந்து போனார். போட் கவிழ்ந்து 15 மணி நேரம் கழித்து, ஜானை, ஒரு கப்பல் காப்பாற்றியது. கடந்த 15 மணி நேரங்களாக, மூழ்கிய படகின், மிச்சங்களை பிடித்தபடி மிதந்ததால் மிகவும் சோர்வுற்றிருந்தான்.

பிறகு போலீஸ் என்ன நடந்தது எனக் கேட்டபோது,
நானும், ரெட்டும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் எதிர்பாராத வகையில் படகு, சூறாவளியில் மாட்டிக் கொண்டது. ரெட்டின் கால்களில், நாங்கள் வீசிய வலை மாட்டிக்கொண்டது. நான், அவரது கால்களை விடுவிக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன்.ஆனால், ரெட்டால் தப்பிக்க முடியவில்லை. படகு மூழ்கிவிட்டது. நான் படகின் பாகத்தைப் பிடித்தவாறு தப்பித்தேன்”.

போலீசார் உடனே ரெட்டை கடலில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மூன்று நாட்கள் கழித்து, ரெட்டின் உடல் நீரில் மிதந்தது. அதனை போஸ்மார்டம் செய்த டாக்டர்,
ரெட்டின் கையில் 5 இடங்களில் சிராய்ப்பு இருக்கிறது. அது கத்தியினால் தாக்கப்பட்ட போது, தற்காத்துக் கொள்ளும் போது ஏற்பட்ட காயம் போல இருக்கிறது. மேலும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ரெட் இறந்தது, இயற்கையான மரணம் கிடையாது”.

இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதும், ஜான், மேலும் விசாரணைக்கு அழைக்கப்பட்டான். அவன் மேல் அனைவருக்கும் சந்தேகம் வழுத்தது. ஒரு வேளை, ஜான் கொலை செய்திருப்பானோ ?.

ஜானை முதல் நாள் தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை செய்தார்கள். அவன் சொன்னதையே திருப்பி, திருப்பி சொன்னான். நடந்தது ஒரு விபத்து. நான் கொல்லவில்லை.

அடுத்த நாள் 3 மணி நேரம் தொடர்ந்த விசாரணையின் முடிவில், ஜான், ரெட்டை கொன்றதாக ஒத்துக்கொண்டான். அந்த சிறு நகரத்தில் இருந்த அனைவரும் கொண்ட சந்தேகம் சரி என முடிவானது. ஆனால், என்ன நடந்தது ? எதற்காக கொன்றான் ?.

படகு, புயலில் மாட்டி, மூழ்கும் நிலையில் இருந்தது. ஒரே ஒரு லைப்சேவிங் டியூப் தான் படகில் இருந்தது. நான் முதலில் அதை எடுக்க முயற்சித்தேன். அப்போது, ரெட்டும், தனக்கு வேண்டும் என்று சொல்லி என்னருகில் வந்தார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் என்னிடம் இருந்த கத்தியால் அவரை தாக்கினேன். அப்படியும், தொடர்ந்து சண்டை போட்டதால் பக்கத்தில் இருந்த இரும்பு கழியால், அவரை தலையில் தாக்கினேன்” என போலீஸ் விசாரணையில் சொன்னான்.

ஜான் கைது செய்யப்பட்டான். அவன் சார்பில் வாதாட வந்த வக்கீல், ஒரு சந்தேகம் கொண்டார். லைப்சேவிங் டியூப் க்காக, அவன் கொலை செய்தான் என வைத்துக் கொண்டால், அவனைக் காப்பாற்றும் போது, அவன் லைப்சேவிங் டியூப் அணியவில்லை என்பது தெரிந்தது.அவனிடம் உண்மையைக் கூறுமாறு கேட்ட போது, அவன் “நான் கொலை செய்யவில்லை” என்றான்.

என்ன இவன் போலீசிடம் ஒத்துக் கொண்டான், இப்பொழுது இல்லை என்கிறான். இதில் எதோ பெரிய குழப்பம் இருக்கிறது. 8 மணி நேரம் போலீஸ் அவனை விசாரணை செய்த வீடியோ டேப், மன நல மருந்துவரிடம் அனுப்பப்பட்டது. ஏன் இவன் மாற்றி, மாற்றி சொல்கிறான் ?. டேப்பை பார்த்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். முதல் 5 மணி நேர விசாரணையில் அவன், தான் ரெட்டை கொல்லவில்லை என்று கூறினான். அதற்குள் போலீசார், போஸ்மார்டம் அறிக்கையை நம்பி, அவனை குற்றத்தை ஒப்புக் கொள்ள சொல்லி மிரட்டினார்கள். அவன் மிகவும் பயந்து போனது டேப்பில் தெரிந்தது. அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் விசாரணை முடிவுக்கு வந்துவிடும் என போலீசார் சொன்னதும், அடுத்த 3 மணி நேரத்தில், அவன் போலீஸ் என்ன சொன்னாலும் அதனை ஒத்துக்கொள்ளும் மன நிலை அடைந்தான்.

போலீஸ்: “போஸ்மார்டத்தில் ரெட் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்ததாக இருக்கு. உண்மையை சொல்லிவிடு”
ஜான் : “ஆமாம் நான் தான் கொன்றேன்”
போலீஸ்: “தலையில் பெரிய காயம் இருக்கிறது. நீ தானே அடித்தாய் ?”
ஜான் : “ஆமாம், அங்கு இருந்த இரும்புக்குழாயால் அடித்தேன்”
(படகில் அவன் கூறிய மாதிரி இரும்புக் குழாயே இருக்கவில்லை என பிறகு விசாரணையில் தெரிந்தது)

மேலும் மனநல மருத்துவர், ஜானைப் பற்றி பார்க்கையில், அவனது I.Q 70, அதாவது சராசரிக்கும் குறைவானது. அவனது நியாபகம் வைத்திருக்கும் திறன் குறைவு என கண்டறிந்தனர். போலீஸ், விசாரணை என்ற பெயரில் கொடுத்த டார்ச்சரில் இருந்து தப்பிக்க அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். இந்த மாதிரி விசாரணைக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்வது நடக்க கூடியது என இன்னொரு கேஸில் இருந்து அறிந்து கொண்டார்கள். மேலும், அமெரிக்க குற்றவியல் சட்டப்படி, பாதி விசாரணை நடக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணையில் இருந்து வெளி நடப்பு செய்யலாம். ஆனால், ஜானுக்கு இந்த மாதிரி இருக்கும் சட்டம் பற்றி தெரியவிலலை. டாக்டர், ஜானிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையே தவறு என தன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டார். ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை, என்ன நடந்தது என அறியும் வகையில் போலீஸ் விசாரணை நடக்க வேண்டும். ஆனால், போலீஸ், குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே விசாரணை செய்தது தவறு.(They expected a confession from him and not what happened there).

நீதிபதி மற்றும் ஜுரிகள், ஜானை நிரபராதி எனக் கூறி வழக்கிலிருந்து விடுவித்தனர்.

எல்லாம் சரி, ஆனால் அந்த போஸ்மார்டம் ரிப்போர்ட். அதை என்ன செய்வது ?

ரெட்டின் உடல் தண்ணீரில் மிதக்கும் போது, அதை கவனிக்காத சிறிய படகு, உடல் மேல் மோதியிருக்கலாம். கையில் இருந்த சிராய்ப்பு, உடலை தண்ணீரில் இருந்து மீட்கும் குழுவினரால் ஏற்பட்டிருக்கலாம். உடலை தண்ணீரில் இருந்து எடுத்த மீட்பு படகினர் இதை உறுதி செய்தனர். மேலும், ரெட்டின் உடலில் இருந்த காயங்கள், கடலில் விபத்தினால் உயிரிழப்பவர்களின், உடலில் ஏற்பட கூடிய பொதுவான காயங்கள் என கண்டுபிடித்தார்கள். மேலும் போஸ்மார்டம் செய்த டாக்டர், தடயவியலில், பயிற்சி பெற்றவர் இல்லை. அவர், கத்தியினால் உடலில் ஏற்பட்ட காயம்தானா என உறுதி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் மேலோட்டமாக ரிப்போர்ட் கொடுத்திருப்பது அறியப்பட்டது.

ஒரு நிரபராதி தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டான். இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது, தடயவியல் பயிற்சி பெற்ற மன நல மருத்துவர்கள்.

Do u know y India is in Trouble?



HI,

Do u know y India is in Trouble?

Why INDIA is in trouble..... ..

Population: 110 crore



9 crore retired

[][][][][]
37 crore in state Govt;


20 crore in central Govt.


(Both categories don't work)

[] []


1 crore IT professional (don't work for India )

[] [][]


25 crore in school

[] [][]


1 crore are under 5 years



[] []


15 crore unemployed



[] [][]


1.2 crore u can find anytime in hospitals

[] [][][][][]


Statistics says u find 79,99,998 people anytime in jail


The Balance
two are U & Me.

U
are busy " checking Mails/sending fwds.. "..!!
[] < []





HOW CAN I HANDLE INDIA alone?


[] \

(¨`.´¨) Always
`
.¸(¨`.´¨) Keep
(¨`
.´¨)¸.´ Smiling!!
`
.¸.´
Cheers´¨)
¸
´ ¸.*´¨) ¸.*¨)
(¸.
´ (¸.* ♥♥♥...♪♪♪


Regards
N.Arul lingam

லேடீஸ் வர்றாங்க கிளம்பு!!


லேடீஸ் வர்றாங்க கிளம்பு!!



"லேடீஸ் வராங்கள்ல நகருங்க!!"


"லேடீஸ் நிக்கிறாங்கல்ல.. இடம் கொடுங்க சார்!!"


"லேடீஸ்கு முதல்ல கொடுத்து அனுப்புங்கப்பா!!"


மேல இருக்க இந்த வரிகளை, பஸ்ல, தியேட்டர்ல, ரேசன் கடைல, இப்படி கண்ட கண்ட இடத்துலயும் கேட்டிருக்கோம்! இந்த வரிகளையெல்லாம் தமிழ்நாட்டுல அதிகமா உபயோகப்படுத்துறது 'லேடீஸ்' இல்ல என் மக்களே... நம்ம ஆண் தோழர்கள் தான்!

எங்க பார்த்தாலும் எப்பப் பார்த்தாலும் எப்படிப் பார்த்தாலும் இவைய்ங்க தொல்ல தாங்க முடியாது.. நம்மலே பஸ்ல ஒரு கம்பிய புடிச்சு, கஷ்டப்பட்டு பேலன்ஸ் பண்ணி, ஓரமா நிப்போம், அப்ப ஒருத்தன் திடீர்னு பின்னாடி இருந்து கத்துவான், "ஏன் சார், லேடீஸ் வராங்கள்ல? கொஞ்சம் நகர்ந்தா என்ன சார்?"னு கேட்டுட்டு, நம்மல பார்த்து கடுப்பான ஒரு முறைப்பும், அந்த பொம்பளையப் பார்த்து ஒரு சிரிப்பும் வுடுவான். நமக்கு கேவலமா இருக்கும். அதுல அந்த அல்பத்துக்கு ஒரு பெருமை.

என்னமோ த்ரெளபதிக்கு 'அன்லிமிடெட்' சேலை கொடுத்த கிருஷ்ணபரமாத்மா மாதிரி! இவய்ங்க தொல்ல பஸ்சு, தியேட்டர்லதான் அதிகம்னு பார்த்தா, கண்றாவி இப்போ இன்னொரு இடத்துலயும் ஆரம்பிச்சுட்டாய்ங்க...!! நானும் என் நண்பர்களும் சாப்பிட்டுட்டு இருக்கப்ப ஒருத்தன் வேகமா வந்து, "ரெண்டு நூடுல்ஸ் பார்சல்"னு பில் வாங்குனான். பார்சல் பண்றவன்கிட்ட பில்ல கொடுக்குறப்ப அந்தப் பய ஒன்னு சொன்னான் பாருங்க, எங்களுக்கு சாப்டதெல்லாம் வெளிய வந்துருச்சு.... வாய் வழியா!!!
"அண்ணே.. லேடீஸ் சாப்பிடுறதுண்ணே. கொஞ்சம் நல்லா பண்ணிக் கொடுங்கண்ணே!!!!"ன்னான். நாங்க நாலு பேரும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டோம். நான் என் நண்பன் கிட்ட "என்ன மாப்ள இவய்ங்க? இப்படி ஆரம்பிச்சுட்டாய்ங்க? எது எதுக்கு 'இதை'ச் சொல்றதுனு இவய்ங்களுக்கு ஒரு விவஸ்தையே கிடையாதாடா?"னு நொந்து போய் சொன்னேன்.

அதுக்கு அவன் சொன்னான் "இது ஒன்னுலதான் நம்ம ஊருல வித்தியாசம் பார்க்காம இருந்தாய்ங்க, இப்ப இதுலயும் ஆரம்பிச்சுட்டாய்ங்கடா!!"னு.


சாப்பிட்டு வெளிய வந்து ஒரு பெட்டிக் கடைக்கு போனோம். என் நண்பன், கடைக்காரன் கிட்ட ஒரு சிகரெட் வாங்குனான்.

அப்ப நான் சொன்னேன், "அண்ணே நல்லதா தாங்கண்ணே..லேடீஸ் அடிக்கிறது"னு!!!!! கடைக்காரன் கடுப்பாயிட்டான்.. நாங்க 'எஸ்' ஆயிட்ட

தூக்கம்விற்ற காசுகள்



இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்
வாசனை இருக்கலாம்!
ஆனால் வாழ்கையில்....?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்

எப்போ போவேனோ..

எப்போ போவேனோ..



குயில் கூவுறதும்
கறவ கத்துறதும்
காது குளிர கேட்டு
காலைல கண் முழிப்பேன்...

வாய் ஓயாம
வஞ்சாலும்
வாய்க்கு ருசியா
வக்கணையா
சமைச்சு போடும் ஆத்தா...

வட்டிக்கு பணம் கட்ட
வக்கில்லைனாலும் நான்
வேண்டியத வாங்கியாரும்
அப்புச்சி....

எலேய்னு ஒரு குரல் கொடுத்தா
எங்க இருந்தாலும்
என்னான்னு ஓடிவந்து
எனக்கு வேலை செய்யும் தம்பி...

போடி வாடின்னு சண்ட போட்டாலும்
போட்டி போட்டு அடிச்சுகிட்டாலும்
பொய் சொல்லகூட மனசு வராத
பொண்ணு எந்தங்கச்சி...

படிச்சு கிழிச்சாச்சு
பட்டமும் வாங்கியாச்சு
பாரின் கம்பெனில
வேலையும் கிடைச்சாச்சு...

தல வலிச்சா சாய ஆத்தா மடி இல்ல
மருந்து வாங்க அப்புச்சி கூட இல்ல
தைலம் தேய்க்க தம்பியும் இல்ல
தண்ணி 'இந்தா'னு குடுக்க தங்கச்சியும் இங்க இல்ல...

உசிலம்பட்டில பொறந்து
ஊருவிட்டு வந்து
வெந்த ரொட்டியும்
வேகாத அரிசியும்
தின்னும் பொது
கண்ணு தான கலங்குதுக
கூட இருக்குறதுக
காரமானு கேக்குதுக
காரம் ஒன்னும் இல்ல
பாரம் தான்னு சொல்ல
மனசுக்கு தெம்பு இல்ல
வாய்க்கு வார்த்தை இல்ல...

காசுக்கு
வாழ்க்கைய தொலச்ச
கயரா கூட்டத்தவிட்டு
எப்போ போவேனோ
எனக்கும் தெரியல...