கேட்டதும் கிடைத்ததும்

காதல் தான் கேட்டேன்
கண்ணீர் ஏன் தந்தாய் !

பாசம் நான் கேட்டேன்
கவலை ஏன் தந்தாய் !

ஆறுதல் அடைந்தேன் !

அன்பே உன் மனதில்
நான் இல்லை என்றாய்
துடித்துப் போனேன் !

பின்பு

உனக்கு மனசே இல்லை
என்று தெரிந்து
ஆறுதல் அடைந்தேன் !

ஆறுதல் சொல்ல முடியாதவனாய்!!

ஊருக்குப் போகும் போதெல்லாம்
ஒதுங்கியே நிற்கிறான் என் மகன்!!

ஆண்டிற்கு ஒரு முறை என்
அவதாரம் என்பதால்
அருகில் வர மறுக்கிறான்!!

கெஞ்சிப் பேசி
கொஞ்சுவதற்க்குள்
வந்து விட்டது என்
வருகை நாள்
வளைகுடாவிற்கு!!

மொத்தமாய் அழுது
மெதுவாய் அவனருகில் சென்றால்
சப்தமாய் கதறி என்
சட்டையை பிடித்து சொல்லுகிறான்
போகாதே என்று!!

சிரித்துக் கொண்டே
கூடவே அழுதுக் கொண்டே அவன்
கன்னத்தில் முத்தமிட;
என் கழுத்து மட்டும்
சரணடைந்துப் போனது
அவனின் பிஞ்சுக் கரத்தினில்!!

ஆறுதல் சொல்லி அவன்
அம்மா அவனை தூக்க;
அவளுக்கு நான்
ஆறுதல் சொல்ல முடியாதவனாய்!!